/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இறகுபந்து போட்டியில் குறிஞ்சி பள்ளி சாதனை
/
இறகுபந்து போட்டியில் குறிஞ்சி பள்ளி சாதனை
ADDED : ஜூலை 19, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல் :நாமக்கல் குறிஞ்சி பள்ளி, காவேட்டிப்பட்டியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. படிப்பிலும், விளையாட்டிலும் பல சாதனை மாணவர்களை உருவாக்கியுள்ளது.
இப்பள்ளி மாணவர்கள், பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்துகொண்ட குறுவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் கலந்துகொண்டு, 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்கள் குருதர்ஷன், ஜெய்ஹரீஷ் ஆகியோர் முதலிடம், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவன் ஷாருக்கேஷ், ரனேஷ்வர், இரண்டாமிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
அந்த மாணவர்களை, பள்ளி தாளாளர் தங்கவேல், பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.