நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே கொக்கராயன்பேட்டையை சேர்ந்தவர் பழனிசாமி, 56. கூலித்தொழிலாளியான இவர், இரு நாட்களுக்கு முன், சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே தென்னங்குடிபா-ளையம் ஊராட்சி கருங்காலிமேட்டில் உள்ள உறவினர் சுப்ரம-ணியன் வீட்டுக்கு வந்தார். நேற்று மதியம், 2:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள நீரோடை தடுப்பணையில் குளிக்க
பழனிசாமி சென்றார். நீச்சல் தெரிந்தும் அவர் மூழ்கிவிட்டார். மக்கள், அவரை மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.