/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டாஸ்மாக் விற்பனையாளரிடம் வழிப்பறி; கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
/
டாஸ்மாக் விற்பனையாளரிடம் வழிப்பறி; கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
டாஸ்மாக் விற்பனையாளரிடம் வழிப்பறி; கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
டாஸ்மாக் விற்பனையாளரிடம் வழிப்பறி; கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
ADDED : டிச 11, 2024 06:55 AM
நாமக்கல்: நாமக்கல் அடுத்த காதப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 44; வேலகவுண்டம்பட்டி டாஸ்மாக் கடையில் விற்பனையாளர். இவர் கடந்த, 2020 செப்., 26ல் டூவீலரில், சிங்கிலிப்பட்டி பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, தஞ்சை மாவட்டம், திருவையாறு மேல திருப்பம்துருத்தியை சேர்ந்த கூலித்தொழிலாளி கஜேந்திரன், 34, என்பவர், ராஜேந்திரனை தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து, கத்தியை காட்டி மிரட்டி, ராஜேந்திரன் சட்டை பையில் வைத்திருந்த, 1,700 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினார்.
இதுகுறித்து புகார்படி, வேலகவுண்டம்பட்டி போலீசார், கஜேந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு, நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி விஜயகுமார், நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட கஜேந்திரனுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனையும், 100 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.