/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி
/
அரசு பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி
ADDED : ஆக 15, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, பச்சுடையாம்பட்டி, அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் அறுமுகம், 45; கூலித்தொழிலாளி.
இவர், நேற்று மருமகன் சந்திரன், 30, என்பவருடன், டூவீலரில் சென்றார். அப்போது, சேந்தமங்கலம் - வண்டிப்பேட்டை ரவுண்டானா அருகே சென்றபோது, அரசு பஸ்சில் டூவீலர் மேதி விபத்துக்குள்ளானது. இதில், கிழே விழுந்த ஆறுமுகம், பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். சேந்தமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.