/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்
/
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்
ADDED : ஜன 08, 2025 06:49 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடக்கும். இந்தாண்டு வரும், 10ல் நடக்கிறது.
அன்று அதிகாலை, 4:00 மணிக்கு சுப்ரபாதம் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. 5:40 மணிக்கு பரமபத வாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்க, 22,000 லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, சர்க்கரை, 100 கிலோ; முந்திரி, 20 கிலோ; நெய், 20 கிலோ; உலர் திராட்சை, 20 கிலோ; ஏலக்காய், 3 கிலோ; கடலை மாவு, 180 கிலோ; எண்ணெய், 12 டின் பயன்படுத்தி லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியில், 50 பணியாளர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர்.