ADDED : ஏப் 21, 2025 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரி, வாய்க்கால்களை துார்வார, 1.637 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வெண்ணந்துார் ஒன்றியம், தேங்கல்பாளையம் பகுதியில் உள்ள, 20 ஏக்கர் பரப்பளவுடைய அத்தனுார் சின்ன ஏரி வாய்க்கால் துார்வாரும் பணியை, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், 'அட்மா' குழு தலைவர்கள் வெண்ணந்துார் துரைசாமி, ராசிபுரம் ஜெகநாதன், அத்தனுார் டவுன் பஞ்., தலைவர் சின்னசாமி, துணைத்தலைவர் கண்ணன், நாமக்கல் ஆர்.டி.ஓ., சாந்தி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அப்புசாமி, உதவி செயற்பொறியாளர்கள் பிரபு, விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

