/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க லஷ்மி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை

ADDED : பிப் 13, 2024 12:14 PM
நாமக்கல்: அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், கல்வியில் சிறந்து விளங்க, நாமக்கல் லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை விழா நடந்தது.
நாமக்கல் அடுத்த ராமாபுரம்புதுாரில், பிரசித்தி பெற்ற லட்சுமி ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார் கோவில்கள் அமைந்துள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் லட்சுமி ஹயக்ரீவ பெருமாளுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்பு பூஜை நடத்தப்படும். மேலும், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், தேர்வில் வெற்றி பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில், வியாபாரம் செய்வோர் வாழ்வில் முன்னேற்றம் பெறவும் லட்சார்ச்சனை, மகா யாகம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்று காலை சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இன்று, சக்கரத்தாழ்வார், ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு பேனா, பென்சில் ஆகியவற்றுடன், லட்சுமி ஹயக்ரீவர் படம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை லட்சுமி ஹயக்ரீவர் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.