ADDED : ஜூலை 02, 2025 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி கிராமம், போதமலையில் கிடமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இங்குள்ள காப்புக் காட்டில் பொக்லைன் மூலம் மண் வெட்டி செல்வதாக ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை வனத்துறையினர் ஆர்.புதுப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டிப்பர் லாரி ஒன்று மண்ணை அள்ளிக்கொண்டு வேகமாக சென்றது.
மண் அள்ள பொக்லைன் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தது. டிரைவர் தப்பி சென்றார். இதையடுத்து பொக்லைனை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.