/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மழையால் நிலச்சரிவு சீரமைப்பு பணி தீவிரம்
/
மழையால் நிலச்சரிவு சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : டிச 10, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், டிச. 10-
தமிழகத்தில், 'பெஞ்சல்' புயல் காரணமாக, பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்த கனமழையால், பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மேலும், 15க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக சாலையை சீரமைத்து போக்குவரத்தை சரிசெய்தனர்.
தற்போது, மழை முற்றிலும் குறைந்ததால், கொண்டை ஊசி வளைவுகளில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில், மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.