ADDED : பிப் 12, 2026 06:40 AM
அ நிறம் | அளவு
மோகனுார்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், தமிழக அரசு சார்பில், 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ், கல்லுாரி இளநிலை இரண்டாமாண்டு மாணவ, மாணவியருக்கு, டிஜிட்டல் திறனை மேம்படுத்தும் நோக்கில், மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர்(பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, 541 பேருக்கு மடிக்கணினி வழங்கினார்.
