/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதைப்பொருள் இல்லா தமிழகம் விழிப்புணர்வு பணி துவக்கி வைப்பு
/
போதைப்பொருள் இல்லா தமிழகம் விழிப்புணர்வு பணி துவக்கி வைப்பு
போதைப்பொருள் இல்லா தமிழகம் விழிப்புணர்வு பணி துவக்கி வைப்பு
போதைப்பொருள் இல்லா தமிழகம் விழிப்புணர்வு பணி துவக்கி வைப்பு
ADDED : ஆக 10, 2025 12:49 AM
நாமக்கல்,நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில், போதைப்
பொருட்கள் இல்லாத தமிழகம் குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் தலைமை யில், நாளை மாநிலம் தழுவிய போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி பிரசாரம், சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதையொட்டி, மாவட்டம் தோறும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி தலைமையில், போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி பிரசார முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நாமக்கல் மாநகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில், கலெக்டர்
துர்காமூர்த்தி, போதைப்பொருட்கள் இல்லா தமிழகம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை, பஸ்கள் மற்றும் கடைகளின் முன்புறம் ஒட்டும் பணியை துவக்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, பஸ் ஸ்டாண்டில் அவர் ஆய்வுமேற்கொண்டார். அப்போது, கழிவறைகளை துாய்மையாக பராமரிக்க அலுவலர் களுக்கு அறிவுரை வழங்கினார்.