/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
116 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க இணையவழி சேவை துவக்கம்
/
116 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க இணையவழி சேவை துவக்கம்
116 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க இணையவழி சேவை துவக்கம்
116 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க இணையவழி சேவை துவக்கம்
ADDED : ஜூலை 09, 2024 05:54 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக, 116 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தின் இணையவழி சேவையை, கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலகத்தில், விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி ஆணை வழங்கி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை எளிமையாக செயல்படுத்த, இணையதளம் (tnesevai.tn.gov.in) மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, கலெக்டர்களுக்கு பதில், தாசில்தார்களால் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகள் தங்களது கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலைகள் உட்பட அவர்கள் சேர்ந்த தாலுகாவில் அமைந்துள்ள நீர்நிலைகளிலும், வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்து செல்லலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 116 நீர்நிலைகளில், விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக வண்டல் மண் எடுக்க பதிவு செய்ய tnesevai.tn.gov.in என்ற இணைய வழி சேவையை, கலெக்டர் உமா, நேற்று தொடங்கி வைத்தார். டி.ஆர்.ஓ., சுமன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், ஆர்.டி.ஓ., பார்த்தீபன், பஞ்., உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.