/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூட்டுறவு சங்கத்தில் கருப்பட்டி கடலை மிட்டாய் விற்பனை துவக்கி வைப்பு

ADDED : அக் 17, 2025 01:39 AM
நாமக்கல், கூட்டுறவு சங்கத்தில், கருப்பட்டி கடலை மிட்டாய் விற்பனையை இணை பதிவாளர் துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, பாலமேடு கிராமத்தில் உள்ள, மல்லசமுத்திரம் நிலக்கடலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்ற கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் மூலம், மல்லை கருப்பட்டி கடலை மிட்டாய் என்ற பெயரில், கடலை மிட்டாய் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடலை மிட்டாய் 5, 10 ரூபாய் விலையில், 100, 200, 250 கொண்ட பெட்டிகளாக, மொத்தமாகவும் சில்லறையாகவும், ஆர்டரின் பெயரில் தயார் செய்து தரப்படுகிறது. இதன் மூலம் அப்பகுதி நிலக்கடலை விவசாயிகள் பயன்பெறுவர்.
சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், கருப்பட்டி கடலை மிட்டாயின் முதல் விற்பனையை, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு தொடங்கி வைத்தார். திருச்செங்கோடு சரக துணைப்பதிவாளர் கிருஷ்ணன், சார் பதிவாளர் அரவிந்த்,
மல்லசமுத்திரம் வட்டார சங்க செயலர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.