/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பேரிடர் காலங்களில் எச்சரிக்கையாக இருக்க 'டிஎன்அலெர்ட்' மொபைல் செயலி அறிமுகம்
/
பேரிடர் காலங்களில் எச்சரிக்கையாக இருக்க 'டிஎன்அலெர்ட்' மொபைல் செயலி அறிமுகம்
பேரிடர் காலங்களில் எச்சரிக்கையாக இருக்க 'டிஎன்அலெர்ட்' மொபைல் செயலி அறிமுகம்
பேரிடர் காலங்களில் எச்சரிக்கையாக இருக்க 'டிஎன்அலெர்ட்' மொபைல் செயலி அறிமுகம்
ADDED : அக் 10, 2024 03:03 AM
நாமக்கல்: 'பேரிடர் காலங்களில் மழை, வெள்ளம் குறித்து தகவல்களை தெரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்க, 'டிஎன்அலெர்ட்' என்ற மொபைல் போன் செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:பேரிடர் காலங்களில் மழை, வெள்ளம் குறித்த செய்திகளை உட-னுக்குடன் தெரிந்துகொள்ளவும், எச்சரிக்கையாக இருக்கவும், 'டிஎன்அலெர்ட்' என்ற மொபைல் போன் செயலியை, தமிழக அரசு அறிமுகம் செயதுள்ளது. இந்த செயலி மூலம், பொது-மக்கள் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை, முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்துகொள்ளலாம்.
இதில், அடுத்தடுத்த, 4 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு, தற்போதைய வானிலை, மழையளவு, செயற்கைக்கோள் புகைப்படங்கள், மழை வெள்ளங்களின்போது பாதிக்கப்படக்கூ-டிய இடங்கள், பேரிடரின்போது செய்யக்கூடியவை, செய்யக்கூ-டாதவை போன்ற விபரங்கள், தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு விபரம் போன்ற-வற்றை எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
மேலும், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் தொடர்-பான புகார்களை, இந்த செயலியின் மூலம் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 'டிஎன்அலெர்ட்' என்ற மொபைல் போன் செயலியை கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஐ.ஓ.எஸ்., ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பேரிடர் காலங்களில் வானிலை நிலவரங்கள் குறித்த பயனுள்ள தகவல்கள் அடங்கிய, 'டிஎன்அலெர்ட்' என்ற மொபைல் போன் செயலியை அனைத்து பொதுமக்கள், அரசு, பொதுத்துறை அலுவ-லர்கள், அரசு சாரா பணியாளர்கள் பதிவிறக்கம் செய்து பயன்-பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.