/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'கிரிமினல் சட்டத்திற்கு எதிராக பேசிய சட்டத்துறை அமைச்சரை பதவி நீக்கணும்'

ADDED : நவ 20, 2024 07:44 AM
நாமக்கல்: 'மத்திய அரசின் புதிய கிரிமினல் சட்டத்திற்கு எதிராக பேசிய, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, பா.ஜ., மாநில துணைத்தலைவர் துரைசாமி, தமிழக கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மத்திய அரசின் புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிராக போராடும் வக்கீல்களுக்கு ஆதரவாக, கூட்டத்தில் கலந்து கொண்டது, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, புதிய கிரிமினல் சட்டத்திற்கு எதிராக பேசியது கண்டனத்திற்குரியது. அவரின் இந்த செயல், இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும், இந்திய இறையாண்மைக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. அதனால், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தமிழக கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.