/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் பணி புறக்கணிப்பு
/
கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் பணி புறக்கணிப்பு
கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் பணி புறக்கணிப்பு
கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் பணி புறக்கணிப்பு
ADDED : செப் 09, 2025 02:08 AM
நாமக்கல், வக்கீல்களின் சேமநல நிதியை, 10 லட்சத்தில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்பட, 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு, ஒருநாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள், நேற்று நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்திலும், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி என, மாவட்டம் முழுவதும், 1,200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நேற்று நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்றங்களில் வழக்கமாக நடக்கும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.