/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட நீதிபதியை கண்டித்து நாளை வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
/
மாவட்ட நீதிபதியை கண்டித்து நாளை வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
மாவட்ட நீதிபதியை கண்டித்து நாளை வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
மாவட்ட நீதிபதியை கண்டித்து நாளை வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 17, 2024 02:21 AM
குமாரபாளையம்:குமாரபாளையம்
நீதிமன்ற வளாகம், 2020 ஜூலை, 18ல் துவங்கப்பட்டது. அப்போது முதல்
வக்கீல்களுக்கு தனியாக ஓய்வு அறை, உணவு உண்ண அறை, ஆண், பெண்
வக்கீல்களுக்கு உடை மாற்ற தனித்தனி அறை இல்லாத நிலையில், சங்க
நிதியிலிருந்து இவற்றை அமைத்துக்கொள்ள கூட அனுமதி தரவில்லை.
இதுகுறித்து,
பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நீதிபதி அனுமதி தரவில்லை. இதனை
கண்டித்து ஏப்., 15 முதல் காலவரையற்ற நீதிமன்ற பணி புறக்கணிப்பில்
வக்கீல்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று
குமாரபாளையம் வக்கீல் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சார்பு
நீதிமன்றம் அமைய முன்னெடுப்பு பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை
என்பதாலும், அடிப்படை வசதிகள் பலமுறை கேட்டும் செய்து தராததாலும்,
நீதிமன்ற தொடர் புறக்கணிப்பு செய்வது எனவும், நாளை காலை, 10:00 மணிக்கு
நீதிமன்ற வளாகம் முன், மாவட்ட நீதிபதியை கண்டித்து கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

