நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், ப.வேலுார் நான்கு ரோடு பகுதியில், அரசு மதுக்கடை இயங்காத நேரத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பதாக அருகில் உள்ள கடைக்காரர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா உத்தரவுப்படி, எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் நேற்று காலையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு, ப.வேலுார், வடக்கு தெருவை சேர்ந்த பிரகாஷ், 31, என்பவர் மது விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை ப.வேலுார், எஸ்.ஐ., சீனிவாசன் கைது செய்து, 27 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தார்.