/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிரதமரின் கிசான் சம்மான் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு

ADDED : ஆக 03, 2025 12:46 AM
நாமக்கல், பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தின் கீழ், 20-வது தவணை வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல்லில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, 'கிசான் சம்மான் நிதி' திட்டத்தின் கீழ், 20-வது தவணை வழங்கும் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதில், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் கலந்துகொண்டார். அப்போது, பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு, 6,000 ரூபாய், 13 தவணையாக பெறுவது குறித்தும், இத்திட்டத்தின் கீழ் இதுவரை பயனடையாத விவசாயிகளை வேளாண் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்தார்.
மேலும், வேளாண் அறிவியல் நிலையம் மூலம் புதிய தொழில் நுட்பங்களை கண்டறிந்து, அவற்றை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து, அதிக மகசூல் பெற உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன், பேராசிரியர்கள் அழகுதுரை, சங்கரன், சத்யா, பால்பாண்டி, கொ.ம.தே.க., மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சுப்ரமணியன், வேளாண் உதவி இயக்குனர் சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.