தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ உள்ளாட்சி பிரதிநிதிகள் புலம்பல்

உள்ளாட்சி பிரதிநிதிகள் புலம்பல்

உள்ளாட்சி பிரதிநிதிகள் புலம்பல்


ADDED : செப் 05, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் நகராட்சி மற்றும் ஆலாம்பாளையம், படவீடு ஆகிய டவுன் பஞ்., பகுதியில் உள்ளாட்சி அமைப்பு பதவிகளில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளனர். த.வெ.க., ஆட்சி வந்தவுடன், உள்ளாட்சி பிரதிநிதிகள் புலம்பி வருகின்றனர்.

தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் பதவியில் உள்ளவர்கள் தங்கள் வார்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முழுமையாக செய்ய முடியாமல் கிடப்பில் உள்ளது. புதிய பணிகளும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் பரபரப்பாக இருந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் தற்போது அமைதியாக உள்ளனர்.

இதனால் உள்ளாட்சி பதவியில் இருந்தும் அதிகாரம் இல்லையே என, புலம்பி வருகின்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைய, இன்னும், ஆறு மாதங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us