/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லோக்சபா தேர்தல் எதிரொலி 10 தாசில்தார் பணியிட மாற்றம்
/
லோக்சபா தேர்தல் எதிரொலி 10 தாசில்தார் பணியிட மாற்றம்
லோக்சபா தேர்தல் எதிரொலி 10 தாசில்தார் பணியிட மாற்றம்
லோக்சபா தேர்தல் எதிரொலி 10 தாசில்தார் பணியிட மாற்றம்
ADDED : பிப் 03, 2024 03:31 AM
நாமக்கல்: லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசுத்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், வருவாய்த்துறை அலகில் பணியாற்றி வரும் தாசில்தார்கள், 10 பேரை இடமாற்றம் செய்து கலெக்டர் உமா
உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் தாசில்தாராக பணியாற்றி வந்த சக்திவேல், சேந்தமங்கலத்திற்கும், அங்கு பணியாற்றி வந்த சீனிவாசன் நாமக்கல்லுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ப.வேலுார் தாசில்தார் கலைச்செல்வி, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்ட தனிதாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த ராஜேஸ்கண்ணன், கலெக்டர் அலுவலக இசைவு தீர்வாய தனிதாசில்தாராகவும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், ப.வேலுார் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் முத்துக்குமார், ப.வேலுார் தாசில்தாராகவும், நாமக்கல் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் தமிழரசி, நில எடுப்பு மேலாண் அலகு தனிதாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழர் நலன் தனி தாசில்தார் செந்தில்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை தனிதாசில்தாராகவும், நாமக்கல் நில எடுப்பு மேலாண் அலகு தனி தாசில்தார் ராஜேஸ், இலங்கை தமிழர் நலன் தனி தாசில்தாராகவும், இசைவு தீர்வாய தனி தாசில்தார்
பிரகாசம், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' துணை மேலாளராகவும், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் செல்வராஜ், ப.வேலுார் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

