ADDED : மார் 14, 2026 04:42 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கப்பலுாத்து பகுதியில் கிரானைட் கற்கள் கடத்தப்படுவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு ரக-சிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நாமக்கல் கனிம வளத்-துறை உதவி புவியியலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட அதிகாரிகள், கப்பலுாத்து பகுதியில், நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். லாரியில் இருந்த கிரானைட் கற்களுக்கான ஆவணங்களை காட்டுமாறு டிரைவரிடம் கேட்-டனர். அப்போது அதிகாரிகளை கண்டதும் டிரைவர் லாரியை விட்டு இறங்கி தப்பி ஓடினார்.தொடர்ந்து அதிகாரிகள் லாரியை ஆய்வு செய்தபோது, அதில் உரிய அனுமதியின்றி, 30,000 ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிகா-ரிகள் அந்த லாரியை பறிமுதல் செய்து, ஆயில்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார், கிரானைட் கற்கள் எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்பட்-டது என்பது குறித்து அதிகாரிகள் கொடுத்த புகார்படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
