ADDED : செப் 29, 2026 06:01 AM

ராசிபுரம்; ராசிபுரம் அருகே, ஆர்.புதுப்பாளையம் பகுதியில் இருந்து மண் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வந்தது. லாரியை, போதமலை பகுதியை சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ் ஓட்டி வந்தார். லாரி உரி-மையாளர், ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த சுப்பி-ரமணியும் உடன் வந்தார். இந்நிலையில், டிப்பர் லாரி கட்டனாச்சம்பட்டி அடுத்த அத்திப்பழ-கானுார் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்-போது அங்கு திரண்டிருந்த மக்கள், தங்கள் பகு-தியில் அனுமதியின்றி தொடர்ந்து மண் வெட்டி கடத்திச்செல்வதை கண்டித்து, லாரியை சிறை
பிடித்து போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த ராசிபுரம் தாசில்தார் மகேஸ்வரி, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து சட்டவிரோதமாக மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று ஒப்படைத்தார். இதுகுறித்து, வருவாய்த்-துறையினரும், போலீசாரும் விசாரித்து வரு-கின்றனர்.
