ADDED : ஜன 24, 2026 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: சேலம் மண்டல சுரங்கம் மற்றும் புவியியல் துறை சிறப்பு தனிப்படையினர், நாமக்கல் உதவி இயக்குனர் ஜெகதீஷ் தலைமையில், நேற்று முன்தினம், வெண்ணந்துார்--தொட்டியபட்டி சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்-தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மற்றும் டாரஸ் லாரியை சோதனையிட நிறுத்து-மாறு சைகை செய்தனர். லாரியை நிறுத்திய டிரைவர்கள், இறங்கி குதித்து தப்பினர். தொடர்ந்து நடத்திய சோதனையில், உரிய அனுமதி சீட்டு இல்லாமல், கற்களை எடுத்து செல்வது தெரிய-வந்தது. இதையடுத்து, இரண்டு லாரியையும் பறி-முதல் செய்த அதிகாரிகள், வெண்ணந்துார் போலீசில் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், டிரைவர், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

