ADDED : ஏப் 26, 2026 06:14 AM
அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, எல்லப்பாளையம் குடிசைவலவு பகுதியில், நேற்று காலை, 10:00 மணிக்கு, அவ்வழியாக கருக்காய் லோடு ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மோதியதில் மின்கம்பம் சேதமானது.
மல்லசமுத்திரம் மின்வாரிய ஊழியர்கள், விரைவில் மின்சாரத்தை துண்டித்து பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கம்பத்தை நட்டனர். காலை, 10:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரையில் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் தடைபட்டதால் மக்கள் சிரமப்பட்டனர்.
