/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லாரி -- வேன் மோதல்: இரண்டு பேர் பலி
/
லாரி -- வேன் மோதல்: இரண்டு பேர் பலி
ADDED : டிச 14, 2024 02:22 AM
நாமக்கல்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து பூ லோடு ஏற்றிக்கொண்டு, 'மகேந்திரா தோஸ்த்' சரக்கு வேன் ஒன்று, திண்டுக்கல் நோக்கி நாமக்கல் வழியாக சென்றது. வாகனத்தை, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த சிலுக்குவார்பட்டியை சேர்ந்த சக்திவேல், 28, ஓட்டி வந்தார். சரக்கு வேனில், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், 25, விக்னேஷ், 25, ஆகிய இருவரும் வந்தனர்.
நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, சேலம் - நாமக்கல் சாலை, பாப்பிநாயக்கன்பட்டி அருகே அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு வேன், முன்னாள் சென்ற லாரியின் மீது மோதியது. இந்த கோர விபத்தில் சரக்கு வேன் அப்பளம்போல் நொறுங்கியது.
இதில் சிக்கிய நாகராஜ், விக்னேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த சக்திவேல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து, நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

