ADDED : மார் 25, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
ப.வேலுார், ப.வேலுார் பகுதியில் லாட்டரி விற்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. இன்ஸ்பெக்டர் உமா சங்கர் உத்தரவுப்படி, எஸ்.ஐ., சாந்தகுமார் தலைமையில் போலீசார், சக்ரா நகர், பஸ் ஸ்டாண்ட் மற்றும் இதர பகுதிகளில், நேற்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, வாழை மார்க்கெட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விவசாயிகளிடம் விற்பனை செய்து கொண்டிருந்த கந்த நகரை சேர்ந்த லாட்டரி ஏஜன்ட் சம்பத், 64, என்பவரை ப.வேலுார் போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
