ADDED : ஏப் 13, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைய-டுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ., பழனிச்சாமி ஆகியோர், நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்-போது, குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பேக்கரி அருகே லாட்-டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த சசிகுமார், 39, என்பவரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.