ADDED : ஆக 19, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி:நாமக்கல்
மாவட்டம் ஜேடர்பாளையத்தை சேர்ந்த, ராஜகோபால் மகன் ஹரிஹரன், 21.
ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். நாமக்கல் மாவட்டம் மொளசியை
சேர்ந்தவர் கலைவாணி, 19. இவர்கள் காதலித்த நிலையில் இரு வீட்டினரும்
எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும், நேற்று முன்தினம் இரவு வீட்டை
விட்டு வெளியேறினர்.
தொடர்ந்து நேற்று காலை திருமணம் செய்து கொண்டு
இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். இரு வீட்டினரையும்
போலீசார் அழைத்தனர். பெண் வீட்டினர் வரவில்லை. ஹரிஹரன்
குடும்பத்துடன், ஜோடியை போலீசார் அனுப்பி வைத்தனர்.
