/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கீழ்காலனி மேம்பாலம் பராமரிப்பு பணிக்காக மூடல்
/
கீழ்காலனி மேம்பாலம் பராமரிப்பு பணிக்காக மூடல்
ADDED : டிச 03, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்காலனி மேம்பாலம்
பராமரிப்பு பணிக்காக மூடல்
பள்ளிப்பாளையம், டிச. 2-
பள்ளிப்பாளையம் அருகே, கீழ்காலனி பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த வழியாக ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல முக்கிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த மேம்பாலத்தில் பராமரிப்பு பணி நடப்பதால், வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்கள், மாற்று வழியாக ஆர்.எஸ்., வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றன.