ADDED : செப் 28, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மா.கம்யூ., கிளை மாநாடு
எலச்சிபாளையம், செப். 28-
எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமம், புதுகரியாம்பாளையத்தில் நடந்த மா.கம்யூ., கட்சியின் கிளை மாநாட்டிற்கு, நிர்வாகி நல்லதம்பி தலைமை வகித்தார்.
நிர்வாகி துரைசாமி கொடியேற்றி வைத்தார். நிர்வாகி கந்தசாமி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் துவக்கி வைத்து பேசினார்.
இதில், புதுகரியாம்பாளையம் மேல்வளவு, கீழ்வளவு செல்லும் வழியில் வாய்க்கால் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும்.
பள்ளி நேரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பொதுகழிப்பிட வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொதுக்கிணற்றில் மோட்டார் வைத்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.