/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மதுரை வீரன், வேப்பிலை மாரியம்மன்கோவில் கும்பாபிேஷக விழா
/
மதுரை வீரன், வேப்பிலை மாரியம்மன்கோவில் கும்பாபிேஷக விழா
மதுரை வீரன், வேப்பிலை மாரியம்மன்கோவில் கும்பாபிேஷக விழா
மதுரை வீரன், வேப்பிலை மாரியம்மன்கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : செப் 05, 2025 01:18 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த வெள்ளக்கல்பட்டியில் மதுரை வீரன், வேப்பிலை மாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது.
நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து, வெள்ளக்கல்பட்டி, 1வது வார்டு, காமராஜர் நகரில் மதுரை வீரன் மற்றும் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த வாரம் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் கும்பாபி ேஷக விழா தொடங்கியது. நேற்று முன்தினம் யாக சாலை பூஜை, கணபதி பூஜை நடந்தது. முதல்கால பூஜைக்கு பின், காவிரி உள்ளிட்ட புனித நதிகளில் எடுத்து வந்த நீரை, பெண்கள் தீர்த்தக்குடம் ஊர்வலமாக எடுத்து வந்தனர். புனிதநீர் வைத்து இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. மாரியம்மன், மதுரைவீரன், சரஸ்வதி, லட்சுமி, குபேர பூஜைகள் நடந்தன.
நேற்று காலை கலசம் வைத்து, அதன் மீது யாகசாலையில் பூஜை செய்த புனிதநீரை ஊற்றி கும்பாபி ேஷகம் செய்து வைத்தனர். தொடர்ந்து மதுரை வீரன், வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், புனிதநீர் தீர்த்தமாக வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகரன் உள்பட நுாற்றுக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.