ADDED : ஆக 04, 2026 04:08 AM
அ நிறம் | அளவு
ப.வேலுார்; ப.வேலுாரில், மகா மாரியம்மன் கோவில் வளா-கத்தில், ஆண்டுதோறும் ஆடி மாதம், மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
அதன்-படி, இந்தாண்டு ஆடி, 1ல் தொடங்கிய மகாபாரத நிகழ்ச்சி, ஆடி, 18 ஆன நேற்று அதிகாலை நிறை-வடைந்தது. தொடர்ந்து, கதையில் நடித்தவர்கள், நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து முளைப்பாரிகை-யுடன் காவிரி ஆற்றுக்கு சென்று, புனித நீராடி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். ஏற்பாடுகளை, மகாபாரத கதைக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
