/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரத்தில் பராமரிப்பு பணி; குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்
/
ராசிபுரத்தில் பராமரிப்பு பணி; குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்
ராசிபுரத்தில் பராமரிப்பு பணி; குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்
ராசிபுரத்தில் பராமரிப்பு பணி; குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்
ADDED : மார் 15, 2024 02:43 AM
ராசிபுரம்:ராசிபுரம் பகுதியில், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மின்சார வாரியம் சார்பில், பராமரிப்பு பணிகள் நடப்பதால், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் நகராட்சி சேர்மன் கவிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் ராசிபுரம் நகராட்சியில், 22 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் நடந்து வந்தது. தி.மு.க., பொறுப்பேற்றவுடன் படிப்படியாக குறைத்து, 7 நாட்களுக்கு ஒரு முறை காவிரி குடிநீர் வினியோகம் செய்து வருகிறோம். அதேசமயம், உள்ளூர் கிணறு, போர்வெல்கள் மூலம் ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நகராட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் ஒருங்கிணைந்து பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றன. இதனால், சீரான குடிநீர் வினியோகம் தடைபட்டு வருகிறது.
கலெக்டர் அறிவுறுத்தலின்படி, சில நாட்களில் இப்பிரச்னை சரி செய்யப்படும். கோடைகாலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என, பொதுமக்கள் நினைக்க வேண்டாம். சில நாட்கள் மட்டும் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். 2024 இறுதிக்குள் புதிய கூட்டு குடிநீர் திட்டமும் பயன்பாட்டிற்கு வந்து விடும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

