ADDED : செப் 17, 2026 06:07 AM
எருமப்பட்டி:எருமப்பட்டி
யூனியனில், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மக்காச்சோளம்
சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில், மக்காச்சோளம் பயிரிட
மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், 2.5 ஏக்கர் நிலம்
வைத்துள்ள விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டு, 11,500 ரூபாய்
மதிப்புள்ள இடுபொருட்களை மானியமாக பெறலாம்.
இதில், ஒரு ஏக்கர்
நிலத்திற்கு, 15 கிலோ வீரிய மக்காச்சோள விதை நுண்ணுாட்டம், 12.5
கிலோ, உயிர் உரங்கள், அஸோஸ் பைரில்லம், படைப்புழுவை
கட்டுப்படுத்தும் உயிரியல் காரணி, மெட்டாரசியம், அனிசோபிலியே,
நான்கு கிலோ உள்ளிட்ட இடுபொருள்கள் பெற்றுக்கொள்ளலாம்.
மக்காச்சோள விதை வினியோக திட்டத்தின் கீழ், ஒரு கிலோ விதைக்கு, 100
ரூபாய் மானியமாக வழங்கப்படும். இதில் குறைந்தபட்சமாக ஏக்கருக்கு,
2.5 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகள் பயன்பெறலாம்.
மக்காச்சோள விதை
தேவைப்படும் விவசாயிகள், ஆதார் நகல், சிட்டா, குடும்ப அட்டை நகல்
ஆகியவற்றை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நேரில் வழங்கி, பதிவு
செய்து விதைகள் பெற்றுக்கொள்ளலாம் என, இணை இயக்குனர் செல்வி
தெரிவித்துள்ளார்.
