ADDED : அக் 18, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், கொக்கராயன்பேட்டை பகுதியில், காவிரி ஆற்றில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையம் அருகே கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்றில், நேற்று மாலை ஆண் சடலம் மிதந்துள்ளது. மொளசி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். இறந்தவரின் சர்ட் பாக்கெட்டில் இருந்த ஆதார் அட்டை அடிப்படையில், இறந்தவர் பெயர் ராஜ்குமார், 35, சென்னையை சேர்ந்தவர் என, தெரியவந்துள்ளது. இது குறித்து, இவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.