ADDED : ஜன 03, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், ஜன. 3-
ராசிபுரம் அடுத்த, ஆயிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல், 50, இவருடைய விவசாய தோட்டம் நாட்டாமங்கலம் செல்லும் சாலையில் உள்ளது. இங்குள்ள, 40 அடி ஆழ கிணற்றில், 15 அடிக்கு தண்ணீர் உள்ளது. நேற்று காலை நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற பழனிசாமி கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார். அப்போது, தண்ணீரில் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
புதுச்சத்திரம் போலீசார் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணிநேரம் போராடி சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு, 40 வயது இருக்கும். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது யார் என்று அடையாளம் தெரியவில்லை என போலீசார்
தெரிவித்தனர்.

