/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மல்லசமுத்திரம், கபிலர்மலை, மோகனுார், ராசிபுரத்தில் ரூ.15.98 கோடியில் திட்டப்பணி துவக்கம்
/
மல்லசமுத்திரம், கபிலர்மலை, மோகனுார், ராசிபுரத்தில் ரூ.15.98 கோடியில் திட்டப்பணி துவக்கம்
மல்லசமுத்திரம், கபிலர்மலை, மோகனுார், ராசிபுரத்தில் ரூ.15.98 கோடியில் திட்டப்பணி துவக்கம்
மல்லசமுத்திரம், கபிலர்மலை, மோகனுார், ராசிபுரத்தில் ரூ.15.98 கோடியில் திட்டப்பணி துவக்கம்
ADDED : பிப் 17, 2025 03:29 AM
நாமக்கல்,: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், கபிலர்மலை, மோகனுார், புதுச்சத்திரம் மற்றும் ராசிபுரம் ஒன்றியத்தில், 15.98 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற பல்வேறு பணிகள் திறப்பு விழா, ஆறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசியதாவது:
மல்லசமுத்திரம் யூனியன், பீமரப்பட்டியில், 1.28 கோடி ரூபாய் மதிப்பில், கிராம அறிவுசார் மையம் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சமுதாய கூடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது பட்டியலின மக்கள் அளித்த கோரிக்கைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் கூடுதல் கவனம் செலுத்தி நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 4.56 கோடி ரூபாய் மதிப்பில், வையப்பமலை சுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்கு தார்ச்சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், எலச்சிப்பாளையம், புதுச்சத்திரம், மோகனுார் ஒன்றியத்தில், கிராம அறிவுசார் மையம் கட்டும் பணி, தமிழக மாநில வேளாண் விற்பனை வாரியம் சார்பில், 2.75 கோடி ரூபாய் மதிப்பில், கபிலர்மலையில் புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், ராசிபுரம் திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லுாரியில், 8.25 கோடி ரூபாய் மதிப்பில், 150 மாணவியர்கள் தங்கும் வகையில், ஆதிதிராவிடர் நல கல்லுாரி மாணவியர் விடுதி கட்டும் பணி என, மொத்தம், 15.12 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அட்மா குழுத்தலைவர்கள் பழனிவேல், நவலடி, ஜெகநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், தாட்கோ செயற்பொறியாளர் நடராஜன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.