ADDED : மார் 23, 2026 03:12 AM
அ நிறம் | அளவு
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, ஆனங்கூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 46; தனியார் சிமென்ட் கலவை தயார் செய்யும் நிறுவனத்தில், லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று, ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் லாரி ஓட்டி சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற, 'ஈகோ' கார் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியது.
இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டி வந்த நபர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, லாரி டிரைவரை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த லாரி டிரைவர் பாலசுப்பிரமணியம், ப.வேலுார் போலீசில் புகாரளித்தார். விசாரணையில், லாரி டிரைவரை தாக்கிய ப.வேலுாரை சேர்ந்த அண்ணாதுரை மகன் பிரகாஷ், 26, என்பவரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
