ADDED : மே 26, 2025 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுரேந்திரன், 40, நிக்கிகுமார், 22; இவர்கள் இருவரும், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பகுதியில் உள்ள நுாற்
பாலையில் வேலை செய்து வருகின்றனர். நுாற்பாலை அருகி-லேயே சுரேந்திரன் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். சுரேந்-திரனின் மனைவியிடம், நிக்கிகுமார் அடிக்கடி பேசி வந்துள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே, நேற்று முன்தினம் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நிக்கிகுமார் அருகில் இருந்த கட்டையை எடுத்து, சுரேந்திரனை சரமாரியாக தாக்கி-யுள்ளார். படுகாயமடைந்த சுரேந்திரனை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிந்து, நேற்று மாலை, நிக்கிகுமாரை கைது செய்தனர்.