/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெண்களை ஆபாசமாக படம்எடுத்தவர் கைது
/
பெண்களை ஆபாசமாக படம்எடுத்தவர் கைது
ADDED : டிச 04, 2024 01:54 AM
பெண்களை ஆபாசமாக படம் எடுத்தவர் கைது
குமாரபாளையம், டிச. 4-
குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி, கோனக்காடு, வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜம்மாள், 50. தட்டான்குட்டை ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, 2:30 மணியளவில் இவரும், இவருடன் பணியாற்றும் சில பெண்களும் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் ஓய்வெடுத்துள்ளனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த கேசவராஜ் என்பவர், பெண்களை ஆபாசமாக மொபைல் போனில் படம் எடுத்துள்ளார். இதையறிந்த ராஜம்மாள் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட பெண்கள், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டு, கேசவராஜ் மீது புகாரளித்தனர். அவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.