/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கைத்தறி ரகத்தை விசைத்தறியில் ஓட்டியவர் கைது
/
கைத்தறி ரகத்தை விசைத்தறியில் ஓட்டியவர் கைது
ADDED : ஆக 20, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, ஒட்டன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 42; விசைத்தறி வைத்துள்ளார். இவரது கூடத்தில், கைத்தறி ரகத்தை விசைத்தறியில் ஓட்டி வருவதாக, கைத்தறி ரக ஒதுக்கீடு சட்ட உதவி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, உதவி அமலாக்க அலுவலர் விஜயராணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கைத்தறி ரகமான, பார்டர் மற்றும் முந்தியுடன் கூடிய கிரே அங்கவஸ்திரம், விசைத்தறியில் சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து வருவது கண்டறியப்பட்டது. இதுகுறித்து உதவி அமலாக்க அலுவலர் விஜயராணி அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார், கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

