ADDED : ஏப் 14, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: பீஹார் மாநிலம், மத்தியாபிரி மாவட்டம், சாம்பூர் பகுதியை சேர்ந்தவர் பத்ரி மாத்தோ, 45; கூலித்தொழிலாளி. இவர், கடந்த, ஆறு மாதமாக, நாமக்கல் அடுத்த காவேட்டிப்பட்டியில் உள்ள கோழித்தீவன உற்பத்தி ஆலையில் பணியாற்றி வந்தார். ஆலைக்கு சொந்தமான குடோனில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, லாரியில் தவிடு மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தார்.
தலையில் தவிட்டு மூட்டையை வைத்துக்கொண்டு, லாரியின் மர படியில் கால் வைத்தார். அப்போது, நிலை தடுமாறி மூட்டையுடன் கீழே விழுந்தார். இதில் மயக்கமடைந்தவரை, சக தொழிலாளர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பத்ரி மாத்தோ இறந்து விட்டதாக தெரிவித்தனர். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.