ADDED : ஜூன் 10, 2026 03:27 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம்
அருகே, வெப்படை அடுத்த படவீடு பழையூர் பகுதியை சேர்ந்தவர்
விஸ்வநாதன், 47: லாரி டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம்
உள்ளது. நேற்று முன்தினம் இரவு, மது குடித்துவிட்டு போதையில் தடுமாறி
கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, வீட்டின் முன் நிலை
தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அங்கிருந்த கல் மீது விழுந்து
விட்டதால், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான
நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு,
நேற்று காலை, 9:00 மணிக்கு உயிரிழந்தார். இதுகுறித்து வெப்படை
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
