/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கருப்பண்ணசாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
/
கருப்பண்ணசாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
ADDED : நவ 10, 2025 01:54 AM
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, மறவாபாளையத்தில் சிங்காரத்தோப்பு பெரிய கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. கடந்த, 60 நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது.
அதயொட்டி, தினந்தோறும் மண்டல பூஜை நடந்தது.மண்டல பூஜை நிறைவையொட்டி, ஊர் மக்கள், குடிபாட்டு மக்கள் ஆடு, கோழி பலியிட்டு பூஜை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை, 8:00 மணிக்கு பெரிய கருப்பண்ண-சாமி, மதுரை வீரன் சுவாமிக்கு, 16 வகை வாசனை திரவியங்-களால் அபிஷேகம் நடந்தது. 11:00 மணிக்கு, 30 ஆடுகள் பலி-யிடும் நிகழ்ச்சி நடந்தது. மதியம், 1:00 மணிக்கு தொடர்ந்து சிறப்பு
அபிஷேகம், ஆராதனை நடந்தது.
மதியம், 2:00 மணிக்கு, கருப்பண்ணசாமி, மதுரை வீரன் சுவா-மிக்கு அசைவம் படையலிட்டு வழிபாடு நடத்தினர். பக்தர்க-ளுக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.

