ADDED : ஜூலை 01, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில், திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் இறைவனோடு இரண்டற கலந்தார். இந்நாளில், அனைத்து சிவ தலங்களிலும் மாணிக்கவாசகருக்கு குருபூஜை நடந்து வருகிறது.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, சேந்தமங்கலம் சவுந்தரவள்ளி அம்பாள் சமேத சோமேஸ்வரர் கோவிலில் உள்ள, 63 நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, மாணிக்கவாசகருக்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, திருவாசகம் முற்றோதல் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.