ADDED : ஏப் 07, 2025 01:56 AM
ராசிபுரம்: சர்வதேச விளையாட்டு தினம் மற்றும் கொ.ம.தே.க., மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், உடல் உறுதி குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.
போட்டியை, திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் மற்றும் முன்னாள் எம்.பி., சின்ராஜ் உள்ளிட்டோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முத்துக்காளிப்பட்டி பகுதியில் இருந்து தொடங்கி, ஏ.டி.சி., டிப்போ, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை மற்றும் சேலம் சாலை, ராசிபுரம் நகர் பகுதி என பல்வேறு சாலைகள் வழியாக சென்றது.
மாரத்தான் போட்டி, 10 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர் முதல், 45 வயதிற்கு உட்பட்ட பெரியவர்கள் வரை என, 12 பிரிவுகளின் கீழ் நடந்தது. மாரத்தான் போட்டியில், 1,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உடல் ஆரோக்கியத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்க-ளுக்கு, இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசு தொகை மற்றும் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

