/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன், பாட்டப்பன் கோவில் கும்பாபிஷேகம்
/
மாரியம்மன், பாட்டப்பன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 01, 2025 01:21 AM
ராசிபுரம், ராசிபுரம், கூனவேலம்பட்டி பஞ்., பாலப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன், பாட்டப்பன், விநாயகர், முருகன், கருப்பண்ணன், நவகிரஹ கோவில்கள் உள்ளன. இக்கோவில் கும்பாபிஷேக விழா, நாளை காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. முன்னதாக, நேற்று கணபதி பூஜையுடன் யாக சாலை தொடங்கியது.
நேற்று பெண்கள் புனித நீர் எடுத்து ஊர்வலம் வந்தனர். இன்று, கணபதி, நவகிரஹ, மஹாலட்சுமி ஹோமம் நடக்கிறது. இரவு, கோபுரம் கண் திறப்பு, கோபுர கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு மாரியம்மன், பாட்டப்பன் உள்ளிட்ட கோவில் கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடக்கிறது.