/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவில் திருவிழா சுவாமி வேடமிட்டு அசத்தல்
/
மாரியம்மன் கோவில் திருவிழா சுவாமி வேடமிட்டு அசத்தல்
மாரியம்மன் கோவில் திருவிழா சுவாமி வேடமிட்டு அசத்தல்
மாரியம்மன் கோவில் திருவிழா சுவாமி வேடமிட்டு அசத்தல்
ADDED : ஏப் 28, 2024 03:46 AM
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டையில் புது மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம். அதேபோல் நடப்பாண்டு திருவிழா, வரும், 23ல் காப்பு கட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, நேற்று மாரியம்மன் மயில் வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. மேலும், நேற்று மாலை, நடன கலைஞர்கள் சிவன், பார்வதி, லட்சுமி, மாரியம்மன், கருப்புசாமி, முருகர் சுவாமி வேடமிட்டு நடனமாடியது, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நடனத்தை பார்க்க சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்திருந்தனர். விழா ஏற்பாடுகளை பக்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.