/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 07, 2025 04:33 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, இந்திரா நகரில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் மற்றும் பரிகார தெய்வங்கள் உள்ளன. இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 30ல் முகூர்த்தகால் நடுதலுடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு செல்வ விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடந்தது. மாலை விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பரிவேச பலி, கும்ப அலங்காரம், பரிவார பூஜை, முதல்கால யாகம் துவக்கம், தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு வேதபாராயணம், கோபூஜை, சூரிய நாராயண பூஜை, யந்திர ஸ்தாபிதம், நாடிசந்தானம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், பூர்ணாஹூதி, கடம்புறப்பாடு நடந்தது. காலை, 7:30 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் விநாயகர், முத்துமாரியம்மன், கருப்பணார், மதுரை வீரன் ஆகியவைகளுக்கு புனித நீரை கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.